கீழக்கரை டிச, 4
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெருக்கடிக்கு மிக முக்கிய காரணிகளில் குடிநீர் லாரிகளும் அடங்கும்.
காலை 8 மணி முதல் 9 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ,மாணவியர்கள் வேன் மற்றும் மினி பேருந்துகளில் செல்வது வழக்கம். இந்த நேரத்தில் தெருக்கள் தோறும் குடிநீர் வழங்கும் லாரிகள் சாலைகளை அடைத்துக்கொள்வதால் பள்ளி,கல்லூரி செல்லும் வாகனங்கள் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசலில் சிக்கி கொள்கின்றன.
இதனால் குறித்த நேரத்தில் மாணவர்கள் பள்ளி வகுப்புகளுக்கு செல்லமுடியாமல் தாமதமாகி விடுகின்றன. இத்தகைய போக்கு படிக்கும் மாணவர்களிடையே மன உளைச்சலையும்,பதட்டத்தையும் ஏற்படுத்துகின்றன.
இதுதொடர்பாக பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள்,சமூக ஆர்வலர்கள், தண்ணீர் லாரிகள் காலை 9 மணிக்கு மேல் ஊருக்குள் வரவேண்டுமென்றும் இதற்கு நகராட்சி மற்றும் காவல்துறை போதிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் கூறுகின்றனர்.
பள்ளி,கல்லூரி செல்லும் மாணவர்கள் குறித்த நேரத்திற்கு வகுப்பறை செல்லும் வகையில் தண்ணீர் லாரிகளால் ஏற்படும் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணவேண்டுமென சமூக ஆர்வலர் அஜிஹர், கீழக்கரை நகர் எஸ்.டி.பி.ஐ கட்சியின் முன்னாள் தலைவர் ஹமீது பைசல் ஆகியோர் நகராட்சிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ஜஹாங்கீர் ஆருஸி.
மாவட்ட நிருபர்.