புதுக்கோட்டை நவ, 26
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள் தங்கள் குறைகளை எடுத்துக் கூறினர். கூட்ட முடிவில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது,
விவசாயிகளின் குறைகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சரவணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா பிரியா, வேளாண் இணை இயக்குனர் பெரியசாமி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் தனலட்சுமி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு உதவியாளர்கள் பல கலந்து கொண்டனர்