விருதுநகர் நவ, 19
ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதியதாக அமைக்கப்பட்ட மூன்று வகுப்பறை கட்டட திறப்பு விழா நடைபெற்றது. தங்கபாண்டியன் அமைச்சர் முன்னிலையில் பிளஸ் டூ மாணவிகள் ரிப்பன் வெட்டி கூடுதல் வகுப்பறை கட்டிடத்தை திறந்து வைத்தனர்.
மேலும் இவ்விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன், பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் பரமசிவம், பாலசுப்ரமணியன், கிளைச் செயலாளர் சின்னத்தம்பி, அமுதரசன், சீதாராமன், தங்கப்பன், வைரவன் மகளிர் அணி சொர்ணம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.