புதுக்கோட்டை நவ, 16
புதுக்கோட்டை மாவட்டம் வடமலை தெம்மாவூர் முத்துமாரியம்மன் கோவிலுக்கு சொந்தமாக ஜல்லிக்கட்டு காளை இருந்தது. இந்த காளை புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி திருச்சி, தஞ்சாவூர், மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் மாடுபிடி வீரர்கள் பிடியில் சிக்காமல் பல பரிசுகளை வென்றுள்ளது.
இந்நிலையில் அந்த காளைக்கு கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் காளை உயிரிழந்தது. காளையின் இறப்பு அந்த கிராம மக்களை சோகத்தில் ஆழ்த்தியது. இதனைத் தொடர்ந்து கோவிலுக்கு கிராம மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாடு பிடிவீர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் ஒன்று திரண்டு வந்து காலையில் உடலுக்கு மாலை அணிவித்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.