விருதுநகர் நவ, 16
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் பொது நூலகத்துறை தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து விருதுநகர் மதுரை சாலையில் கே. வி எஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புத்தக திருவிழா உள்ள பொருட்காட்சி மைதானத்தில் இன்று முதல் நடைபெற உள்ளது.
தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் தங்கம் தென்னரசு கலந்து கொண்டு புத்தகத் திருவிழாவை தொடங்கி வைக்கின்றனர். மேலும் நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் அரசு உயர் அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.