புதுடெல்லி நவ, 15
தேர்தல் பத்திரங்கள் மூலம் பெற்ற நன்கொடை விபரங்களை இன்று மாலை 5 மணிக்குள் தாக்கல் செய்யுமாறு அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் நன்கொடை அளித்த நபர், நிறுவனங்களின் விபரங்கள், தேதி, எந்த வங்கி கணக்கில் பத்திரங்கள் பணமாக்கப்பட்டன, மொத்த தொகை போன்ற அனைத்து விபரங்களையும் சீலிட்ட உறையில் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.