சென்னை நவ, 12
விதிமுறைகளை மீறி பட்டாசு வெடிப்பவர்களுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். தீபாவளியான இன்று வெறும் இரண்டு மணி நேரம் மட்டுமே(காலை6-7,மாலை 7-8) நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்த விதிகளை மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு தமிழக முழுவதும் காவல்துறை அதிகாரிகள் தயாராக இருக்கும்படி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.