பெங்களூரு நவ, 12
இந்தியா-நெதர்லாந்து இடையிலான உலக கோப்பை லீக் போட்டி இன்று பெங்களூரில் நடைபெற உள்ளது. கடைசி லீக்போட்டி என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் பெரும் ஆவலுடன் உள்ளனர். சின்னச்சாமி மைதானத்தில் இப்போட்டிக்காக இரு அணிகளும், தீவிர பயிற்சியில் களமிறங்கியுள்ளது. நடந்து முடிந்த எட்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்ததோடு முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த போட்டியிலும் இந்தியா வெற்றி பெறும் என பெரிதும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.