சென்னை நவ, 12
தமிழகத்தில் அரசு அலுவலகங்கள், பொது நிறுவனங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை பொது விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளிக்கு சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளைய விடுமுறையை ஈடு செய்யும் வகையில் நவம்பர் 18ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.