பஞ்சாப் நவ, 9
ஒரே நாளில் பஞ்சாப்பை சேர்ந்த விவசாயி கோடீஸ்வரன் ஆகியுள்ளார். மகில்பூரைச் சேர்ந்த ஷீத்தல் இரண்டு நாட்களுக்கு முன்பாக லாட்டரி சீட்டு வாங்கியுள்ளார். அந்த சீட்டுக்கு 2.5 கோடி பரிசு விழுந்துள்ளது. இதை அறிந்த ஷீத்தல் குடும்பத்தினர், ஊர் மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார். என் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளதாகவும், வாழ்த்துவதற்காக கிராம மக்கள் வீட்டிற்கு வருவதாகவும் ஷீத்தல் கூறினார்.