ராஜஸ்தான் நவ, 9
ராஜஸ்தானில் மத்திய உள்துறை அமைச்சர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது ஒரு பகுதியில் அமித்ஷா சென்ற வாகனம் மின் கம்பியில் உரசி விபத்துக்குள்ளானது. தீப்பொறியுடன் மின்கம்பி அறுந்து விழுந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த வாகனத்தில் இருந்த அமித்ஷா உட்பட பாரதிய ஜனதா கட்சியினர் ஆபத்தின்றி உயிர் தப்பினர். பின்பு வேறு வாகனத்தில் அமித்ஷா அழைத்துவரப்பட்டார்.