ராமநாதபுரம் நவ, 9
ராமநாதபுரம் மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நேற்று மாவட்ட கண்காணிப்பாளர் தங்கதுரை தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக மாவட்ட கண்காணிப்பாளரிடம் கொடுத்தனர். குறிப்பாக குடும்பப் பிரச்சனை, சொத்து தகராறு உள்ளிட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டன. மனுக்களை பெற்ற அவர் சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.