ராமநாதபுரம் நவ, 12
நயினார் கோவில் வட்டாரம் பார்த்திபனூர் பகுதியில் கீழ்வைகை வடிநிலக்கோட்டம் சார்பில் தமிழ்நாடு பாசன வேளாண் நவீனப்படுத்தும் திட்டத்தின் கீழ் புனரமைத்த கால்வாய் மூலம் பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நேற்று ஆய்வு செய்தார். கீழ் வைகை, வடிநிலக்கோட்டை செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் கார்த்திகேயன் உடன் சென்றனர்