கீழக்கரை நவ, 8
ராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வரும் வழியில் கீழக்கரை தாலுகா அலுவலகம் அருகில் நெடுஞ்சாலை துறை திடீரென செம்மண் வேகத்தடையை உருவாக்கியுள்ளது.
இந்த இடத்தில் இப்படியொரு வேகத்தடை இருப்பதை அறியாத வாகன ஓட்டிகள் நேற்றைய தினம் விபத்துக்குள்ளாகினர். தார் சாலையின் மீது செம்மண் வேகத்தடை அமைக்கும் நவீன கண்டுபிடிப்பின் மூலம் நெடுஞ்சாலை துறை மக்களை கேலி கூத்தாக்கி வருகிறது.
உடனடியாக இந்த வேகத்தடையை அப்புறப்படுத்தி முறையான வேகத்தடையை உரிய அறிவிப்பு பலகை அமைத்து உருவாக்க வேண்டுமென்பதே மக்களின் எதிர்பார்ப்பாகும்.
ஜஹாங்கீர் ஆருஸி
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.