சென்னை நவ, 8
தமிழகத்தில் பருவ மழை தொடங்கிய நிலையில், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காய்ச்சல் வைரஸ் காய்ச்சல் போன்றது ஏற்படுகிறது. இதனால் மக்கள் கூட்டம் கூட்டமாக மருத்துவமனைக்கு செல்கின்றனர். இந்நிலையில் காய்ச்சலை கட்டுப்படுத்தும் நோக்கில் வீடு வீடாக சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவு பிறந்துள்ளது. காய்ச்சல் இருந்தால் உடனே அருகில் உள்ள மருத்துவரை அணுக அறிவுறுத்தப்பட்டுள்ளது.