சென்னை நவ, 6
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு மின் கட்டணம் 3 மடங்கு உயர்த்தப்பட்டதாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம் சாட்டியுள்ளார். தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணம் மட்டுமின்றி, வீடுகளுக்கான கட்டணமும் மூன்று மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூலி வேலைக்கு செல்வோர் வீட்டில் ரூ.100, ரூ.200 கட்டணம் வந்த இடத்தில் தற்போது ஆயிரம் ரூ.1500 வருவதாகவும், தொழிற்சாலைகளுக்கு லட்சக்கணக்கில் மின் கட்டணம் வருவதாகவும் அவர் சாடியுள்ளார்.