புதுடெல்லி நவ, 1
FSSAI ஆணையத்தில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ள நாடாளுமன்றத்தில் திருத்த மசோதா விரைவில் தாக்கல் செய்யப்படும் என மத்திய உணவு துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக பேசிய உணவுத்துறை செயலர் சுதான்ஷ் பன்ட், ” நாட்டின் அமைப்புசாரா துறையாக உணவுத்துறை உள்ளது. உணவு தர விதிமுறைகளை உறுதி செய்ய அதிகாரங்களுடன் கூடியதாக வலுப்படுத்த இம்மசோதா நிறைவேற்றப்படும்” என்றார்.