சென்னை நவ, 1
இந்தியன் 2 படத்தை தொடர்ந்து தற்போது இந்தியன் 3 படம் உருவாகி வருவதாக சுவாரசிய தகவல் வெளியாகியுள்ளது. இரண்டாம் பாகத்தில் காட்சிகள் அதிகமானதால் அதையே இரண்டு பாகங்களாக எடுக்க படக் குழு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் அதற்காக கூடுதல் காட்சிகள் எடுக்க வேண்டும் என கமலிடம் மேலும் 40 நாட்கள் கால் சீட் வாங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மூன்றாம் பாகம் உறுதியானது தொடர்ந்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.