சென்னை அக், 26
ஜனாதிபதி வருகையால் சென்னையில் இன்று மூன்றடுக்கு காவல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உத்தண்டியில் உள்ள இந்திய கடல் சார்ந்த பல்கலைக்கழகத்தில் நாளை பட்டமளிப்பு விழா நடைபெறுகிறது. இதில் பங்கேற்க சென்னை வரும் ஜனாதிபதி, கிண்டி ராஜ் பவனில் இன்று இரவு தங்குகிறார். முன்னதாக ஆளுநர் மாளிகை முன்பு நேற்று பெட்ரோல் குண்டு வீசப்பட்ட நிலையில் பாதுகாப்பு பணியில் 5000 காவல் துறையினர் ஈடுபட உள்ளனர்.