விருதுநகர் அக், 15
அரசு இ-சேவை மையங்களில் சர்வர் கோளாறு ஏற்படுவதால் பொதுமக்கள் மணி கணக்கில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் இ-சேவை மையங்களில் ஆதார் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் போன்ற பணிகளை மேற்கொள்ள முடியவில்லை. அதேபோல் மகளிர் உரிமைத் தொகையைப் பெற மேல்முறையோடு செய்ய முடியாமலும் குடும்ப தலைவிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர். எனவே சர்வர் கட்டமைப்பை உடனே மேம்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.