இஸ்ரேல் அக், 14
இஸ்ரேல் -ஹமாஸ் குழுவினர் இடையே தீவிர சண்டை நடைபெற்று வரும் நிலையில் ஒவ்வொரு நாடும் தங்கள் நாட்டை சேர்ந்த மக்களை மீட்டு வருகிறார்கள். அந்த வகையில் ஆபரேஷன் அஜய் மூலம் முதல் கட்டமாக 212 பேர் மீட்கப்பட்டு இந்தியா வந்தனர். இந்நிலையில் இரண்டாவது கட்டமாக 235 பேர் இஸ்ரவேலில் இருந்து மீட்கப்பட்டு தாயகம் திரும்பியுள்ளனர். ஏறக்குறைய இந்தியாவை சேர்ந்த 18,000 பேர் இஸ்ரேலில் இருப்பதாக கூறப்படுகிறது.