சென்னை அக், 12
லியோ படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. இதற்காக விளம்பர வேலையில் படக்குழு தீவிரமாக இறங்கியுள்ளது. அந்த வகையில் ஒரு பேட்டி ஒன்றில் சுவாரஸ்யமான தகவலை லோகேஷ் தெரிவித்துள்ளார். அதாவது தனக்கு சூப்பர் ஸ்டார் ரஜினி போனில் தொடர்பு கொண்டு, லியோ படம் வெளியாகிறது. படம் வெற்றி அடைய வாழ்த்துக்கள் லோகேஷ் என கூறியதாக அவர் கூறியிருக்கிறார். லியோவை தொடர்ந்து தலைவர் 121 படத்தை லோகேஷ் இயக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.