அக், 11
நமது UAE இணை ஆசிரியர் அவரது உம்ரா பயணம் பற்றி நம்முடைய பகிர்ந்து கொண்ட நிகழ்வுகள் ஒரு சிறிய (சிறப்பு) தொகுப்பு:
சவூதி அரேபியா மதினா மக்களின் நேர்மையும் நாணயமும் – உலக மக்களுக்கு ஓர் படிப்பினை!
என் வாழ்வில் மறக்கமுடியாத நிகழ்வு இறைவனுக்கு நன்றி ..
இஸ்லாமியர்களின் வாழ்நாளின் புனித பயணமாக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா மதினாவிற்கு உம்ராஹ் செல்வது கடமையாகவும் மற்றும் ஹஜ் புனித பயணம் மேற்கொள்வது இஸ்லாத்தில் ஐந்து கடமைகளில் ஒன்றாகும்.
இதனடிப்படையில் நான் துபாயில் இருந்தும் எனது மனைவி மகள் சுமார் 35 நபர்களுக்கு மேற்பட்டவர்களுடன் தமிழ்நாட்டிலிருந்தும் 40 வருடத்திற்குமேலாக நிறுவனர் கீழக்கரை நௌஷாத் மற்றும் அவரது மகன் நதீம் ஆகியோரின் நேரடிப்பார்வையில் சிறப்பான சேவை செய்துவரும் திருச்சி சன்சைன் ஹஜ் சர்வீஸ் மூலம் நான் உம்ராஹ் பயணம் மேற்கொண்டேன் செப்டம்பர் 25ம் தேதி வரை புனித மக்காவில் எனது உம்ராஹ், தவாப்(பாவமன்னிப்பு) மற்றும் வரலாற்றுமிக்க புனித தளங்களை சுற்றிபார்த்துவிட்டு செப்டம்பர் 26ம் தேதி பகல் மக்கா நகரை விட்டு புனித மதினா நகருக்கு பயணம் மேற்கொண்டோம்.
புனித மதினா நகருக்கு செல்லும் வழியில் பல்வேறு வரலாற்று மிக்க புனித இடங்களை பார்த்துக்கொண்டே சென்றோம் அவ்வாறு பார்க்கும் இடங்களில் நோய் நிவாரண கிணற்று தண்ணீர் என்று அழைக்கப்படும் Beer E Shifa என்று அழைக்கப்படும் இடத்திற்கு அழைத்து சென்றார்கள் அப்போது மணி இரவு 7.30 இருக்கும் அங்கே எல்லோரும் இறங்கி அந்த கிணற்றில் வரும் தண்ணீரை எடுத்துக்கொண்டு இருந்தார்கள் நானும் அந்த தண்ணீரை பிடித்துவிட்டு அங்கே இருக்கும் மதீனாவாசி ஒரு சிறிய கடையில் நொறுக்கு தீனி மற்றும் ஒரு சில பொருட்கள் விற்றுக்கொண்டிருந்தார் அதில் முக்கியமான ஓன்று பிலீசன் என்ற ஒரு மூலிகை ஆயில் இந்த ஆயில் எதற்கு என்றால் குழந்தை இல்லாமல் இருக்கும் கணவன் மனைவி இந்த ஆயிலை வெது வெதுப்பான பாலில் ஒரு சிறிய சொட்டு விட்டு இருவரும் அருந்தி வந்தால் இறைவன் அருளால் குழந்தை உருவாகுவதற்கான செயல்பாடுகள் கைகூடும் என்பதால் 3ml ஆயில் 25 ரியலுக்கு வாங்கிவிட்டு கொஞ்சம் நொறுக்கு தீனியும் வாங்கிவிட்டு 50 ரியால் கொடுத்துவிட்டு சில்லறை வாங்கிவிட்டு வந்துவிட்டேன் வரும்போது கடைக்காரர் என்னை கூப்பிட்டார் ஆனால் நான் பஸ் கிளம்பிக்கொண்டிருந்ததால் நான் அவரிடம் போக முடியவில்லை.
எல்லாம் முடிந்து இறைவன் அருளால் 26 ம் தேதி இரவு 9 மணிக்கு மதினா வந்து சேர்ந்து 27 ம் தேதி மதினாவில் அடங்கி இருக்கும் எம்பெருமான் ரஸூலே கரீம் கண்மணி நாயகம் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஸலாம் கூறிவிட்டு அவர்களின் உற்ற தோழர்கள் செய்யதினா அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு மற்றும் செய்யதினா உமர் பின் அல் கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கும் ஸலாம் கூறிவிட்டு ரவ்லா ஷரீப் என்று அழைக்கப்படும் சொர்க்கத்தின் விரிப்பு என்ற இடத்தில் தொழுது பிரார்த்தனை செய்துவிட்டு 28 ம் தேதி மதினாவில் உள்ள வரலாற்று மிக்க இடங்களை சுற்றிப்பார்த்து விட்டு மதினாவில் உள்ள கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு தாயாராகும் போதுதான் எனது மனைவி 26 ம் தேதி இரவு 500 ரியால் தந்ததாகவும் அதற்குரிய பாக்கியை தருமாறு கேட்டார்கள் அப்போதுதான் எனக்கு தெரியவந்தது நான் நோய் நிவாரண கிணற்று இடத்தில் பொருட்களை வாங்கிவிட்டு கொடுத்த பணம் 50 ரியால் இல்லை அது 500 ரியால் என்று.
நான் என் மனைவி இடம் கூறினேன் நான் தவறுதலாக 50 ரியால் என்று 500 ரியாலை கொடுத்துவிட்டேன் என்று சொல்லிவிட்டு நான் என் மனைவிடம் கூறினேன் எனது உண்மையாக சம்பாதித்த பணம் அது எப்போது வீணாகாது அதனை வீணாக இறைவன் ஒருபோது விடமாட்டான் என்று கூறிவிட்டு நடந்ததை சன்சைன் ஹஜ் அண்ட் உம்ராஹ் சர்விஸ் நிறுவனர் நௌஷாத்திடம் நடந்ததை கூற அவர் கூறினார் நீங்கள் தவறாக கொடுத்திருந்தால் அது கிடைத்துவிடும் ஏன் என்றால் மதீனாவாசிகள் ஏமாற்ற மாட்டார்கள் என்று கூறி அக்டோபர் 10 ம் தேதி மற்றொரு குருப்போடு மதினா செல்கிறோம் செல்லும் வழியில் நோய் நிவாரண கிணற்றை பார்க்க செல்வோம் அப்படி செல்லும்போது உங்கள் விஷத்தை சொல்லி கேட்குறேன் நிச்சயம் தருவார்கள் தந்தாள் வாங்கி வருகிறேன் என்று ஆறுதல் கூறினார்.
அதுபோல நேற்று அக்டோபர் 10ஆம் தேதி திருச்சி சன்சைன் ஹஜ் அண்ட் உம்ராஹ் சர்விஸ் நிறுவனர் நௌஷாத் அவர்கள் சென்று 26 ம் தேதி இரவு நடந்ததை கூற கடைக்காரரும் நேர்மையோடு பாக்கி பணம் 450 அவரிடம் இருப்பதாக கூறியுள்ளார். அல்ஹம்துலில்லாஹ் இவர் வியாபாரத்தில் என்ன ஒரு நேர்மை இறைவன் இவர் வியாபாரத்தை சிறப்படைய செய்வானாக. மேலும் அந்த கடைக்காரர் என்னிடம் பேசவேண்டும் என்று கூறியதால் நான் துபாயில் இருந்து அவரிடம் பேசி அவர் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தபிறகு எனக்குரிய பாக்கியான 450 ரியாலை திருப்பி தந்துள்ளார். இறைவனுக்கும் நன்றி மேலும் பணத்தை நேர்மையோடு திருப்பி தந்த அந்த கடைகாரருக்கும் என்பணம் எனக்கு திருப்ப கிடைக்க முயற்சி எடுத்து வாங்கி தந்த திருச்சி சன்சைன் ஹஜ் அண்ட் உம்ராஹ் சர்விஸ் நிறுவனர் நௌஷாத் அவர்களுக்கும் இறைவன் நல்லருள் புரிவானாக.
இவ்வாறு மன நெகிழ்வுடன் தன்னுடைய அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார்.
வணக்கம் பாரதம்./செய்திச் பிரிவு.