அரியலூர் செப், 29
அரியலூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கோட்டாட்சியரை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பயிர் சாகுபடி குறித்து இணையத்தில் பதிவு செய்யாத ஏலாக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலரையும், ஆட்சியர் முகாமில் இருந்த மரத்தை மர்ம நபர்கள் வெட்டியது குறித்து முறையாக தகவல் தெரிவிக்காத வாலாஜா நகரம் கிராம அலுவலரையும் பணியிடம் மாற்றம் செய்த கோட்டாட்சியரைக் கண்டித்து நேற்று இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் இந்தஆர்ப்பாட்டத்தின் போது, இதனை வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை(இன்று) அரியலூர் மாவட்டம் முழுவதும் ஒரு நாள் விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் கிராம நிர்வாக அலுவலர்கள் தெரிவித்தனர். ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்டத் தலைவர் மணிவண்ணன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜா, பழனிவேல், பாக்கியராஜ், நந்தகுமார், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.