சென்னை செப், 24
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் சிலை கரைப்பு நாளையொட்டி இன்று சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல இடங்களில் உச்சகட்ட பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. விநாயகர் ஊர்வலம் நடைபெறும் பகுதிகளில் சுமார் 16,500 காவல் துறையினர், 2000 ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால் காய்ச்சல் இருப்பவர்கள் யாரும் ஊர்வலத்தில் பங்கேற்காமல் வீட்டிலேயே இருப்பது நல்லது.