சென்னை செப், 22
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கு காரணங்களுடன் குறுஞ்செய்தி அனுப்பப்பட்டு வருகிறது. எனினும் சிலருக்கு இந்த குறுஞ்செய்தி வரவில்லை என்று கூறப்படுகிறது. அப்படி குறுஞ்செய்தி வராதவர்கள் இதற்காக பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள kmut.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களது ஆதார் எண்ணை உள்ளீடு செய்து பணம் கிடைக்காததற்கான விபரத்தை தெரிந்து கொண்டு உடனே மேல்முறையீடு செய்யலாம்.