கிருஷ்ணகிரி ஆக, 30
கிருஷ்ணகிரி ஒன்றியம் சோக்காடி அருகே உள்ள ஜம்புத்து கிராமத்தில், தமிழக விவசாயிகள் சங்க ஆலோசனைக்கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்திற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் சின்னசாமி தலைமை தாங்கினார். மாவட்ட ஆலோசகர் நஷீர்அகமத், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வெங்கடேசன், மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட இளைஞர் அணி துணைச்செயலாளர் அனுமத்ராஜ், மாவட்ட துணைச்செயலாளர் வரதராஜன், மாவட்ட பொருளாளர் அசோக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் ராமகவுண்டர் கலந்து கொண்டு சங்கத்தின் கொடியினை ஏற்றிவைத்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட உள்ள கோரிக்கை குறித்து விளக்கவுரை ஆற்றினார்.