கேரளா ஆக, 27
மலையாள மக்களின் மிக முக்கியமான பண்டிகையான ஓணம் ஆகஸ்ட் 29 இல் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில் சென்னையிலிருந்து கேரளாவில் பல பகுதிகளுக்குச் செல்லும் விமான கட்டணம் 7 மடங்கு வரை உயர்ந்துள்ளது. சென்னை முதல் திருவனந்தபுரம் (பழைய கட்டணம் ரூ3,225 புதிய கட்டணம் ரூ.10,945 முதல் ரூ.19,089), சென்னை முதல் கொச்சி (பழைய கட்டணம் ரூ.2,962 புதிய கட்டணம் 6,361 முதல் ரூ.10,243 சென்னை முதல் கோழிக்கோடு (பழைய கட்டணம் ரூ.3,148 புதிய கட்டணம் ரூ 5,914 முதல் ரூ.21,228)