சீனா ஆக, 26
சீனாவில் நடக்கும் ஆசிய விளையாட்டு போட்டியில் பங்கேற்க இந்தியா சார்பில் 634 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இப்போட்டிக்காக இந்திய ஒலிம்பிக் சங்கம் பரிந்துரைத்து தேர்வான நட்சத்திரங்களின் பட்டியலை விளையாட்டு அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் பஜ்ரங் புனியா, பிரக்யானந்தா உள்ளிட்டோர் இடம் பிடித்துள்ளனர். பளு தூக்குதல், ரக்பி போன்ற போட்டிகளுக்கு இன்னும் வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்படவில்லை.