கீழக்கரை ஆக, 25
தமிழகம் முழுவதுமுள்ள 31,500 தொடக்கப்பள்ளிகளில் இன்று முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் உள்ள இரண்டு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.
மறவர் தெருவில் உள்ள தொடக்கப்பள்ளியில் நகராட்சி ஆணையர் செல்வராஜ் முன்னிலையில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா குழந்தைகளுக்கு உணவூட்டி திட்டத்தை துவக்கி வைத்தார்.
நகர்மன்ற துணை தலைவர் ஹமீது சுல்தான், நகர்மன்ற உறுப்பினர்களான சர்ஃப்ராஸ் நவாஸ், பாதுஷா, சக்கினா பேகம், காயத்திரி, ஜெயலட்சுமி, சூர்யகலா, சித்திக், பயாஸுதீன், பைரோஸ் பாத்திமா, சேக் உசேன், பவித்ரா, பள்ளியின் முதல்வர் மலர்கொடி, ஆசிரியை நஸ்ரின் பாத்திமா ஆகியோர் குழந்தைகளுக்கு உணவு பரிமாறினர்.
இந்நிகழ்ச்சியில் நகர் திமுக செயலாளர் பஷீர் அகமது, துணை செயலாளர் மூர் ஜெய்னுதீன், பொருளாளர் சித்திக், சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, பொறியாளர் அருள், கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளர் மகாலிங்கம், ஊர்பசர் சுகாதார குழுவின் கீழக்கரை பொறுப்பாளர் ரஹீம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் முத்துச்சாமிபுரம் ஊராட்சி தொடக்கப்பள்ளியில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா,துணை தலைவர் ஹமீது சுல்தான் நகர்மன்ற உறுப்பினர் காயத்திரி, நமது செய்தியாளர் ஜஹாங்கீர் அரூஸி ஆகியோர் மாணவர்களோடு அமர்ந்து காலை உணவருந்தி மாணவ,மாணவியர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தினர்.
முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் துவக்க நாளான இன்று ரவா கிச்சடி, காய்கறி சாம்பார் மற்றும் கேசரியும் வழங்கப்பட்டது. இத்திட்டம் குறித்து அப்பகுதி மக்கள் வாழ்த்தி வரவேற்பதாகவும் குழந்தைகளின் அடிப்படை கல்வியை ஊக்கப்படுத்துவதாக உள்ளதெனவும் தமிழக முதல்வர் முக.ஸ்டாலினுக்கு நன்றியினை தெரிவிப்பதாகவும் கூறினர்.
ஜஹாங்கீர்
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.