அமெரிக்கா ஆக, 20
உக்கிரேனுக்கு F-16 ரகஅதிநவீனப் போர் விமானங்களை வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. உக்ரைன் வீரர்களுக்கு விமானங்களை இயக்குவதற்கான பிரத்தியேகமான பயிற்சிகள் அமெரிக்க தரப்பில் வழங்கப்பட உள்ளதாக அறிய முடிகிறது. நெதர்லாந்து, டென்மார்க் உள்ளிட்ட நாடுகளிடம் F-16 விமானங்களை கேட்டு உக்ரைன் வான் பாதுகாப்பு அதிகாரிகள் நீண்ட காலமாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தது நினைவு கூறத்தக்கது.