திருவாரூர் ஆக, 20
நெற்பயிர்கள் கருகியதால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ₹35, ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு சிபிஐ மாநில செயலர் முத்தரசன் கோரிக்கை விடுத்துள்ளார். திருவாரூரில் பேசிய அவர், காவிரி நீர் இல்லாததால் 5 லட்சம் ஏக்கர் பரப்பளவில் 1.5 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் கருகிவிட்டன. இதனால் விவசாயிகள் மிகப்பெரும் இழப்புக்கு ஆளாகியுள்ளனர் என வேதனையுடன் கூறினார்