கீழக்கரை ஆக, 17
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் செயல்பட்டு வரும் நமது KLK வெல்ஃபேர் கமிட்டியின் புதிய அலுவலக திறப்பு விழா 16.08.2023 அன்று மாலை மின்ஹாஜ் பள்ளி காம்ப்ளக்ஸில் நடைபெற்றது.
தெற்குத்தெரு ஜமாத் தலைவரும் வெல்ஃபேர் கமிட்டி துணை தலைவருமான ஹாஜி உமர் அப்துல் காதர் களஞ்சியம் தலைமையில் வெல்ஃபேர் கமிட்டி அவை தலைவரும் கண்ணாடி வாப்பா அறக்கட்டளை டிரஸ்டியுமான அல்ஹாஜ் சீனா தானா(எ)செய்யது அப்துல் காதர் அலுவலகத்தை திறந்து வைக்க வெல்ஃபேர் கமிட்டி செயலாளர் கீழை ஜஹாங்கீர் அரூஸி வரவேற்றார்.
கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார், இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளரும் வெல்ஃபேர் கமிட்டியின் சட்ட ஆலோசகருமான MMK.முகைதீன் இப்றாகீம்,நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா, இஸ்லாமி பைத்துல் மால் செயலாளர் முகைதீன் தம்பி, சோஷியல் டெமாக்ரடிக் மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது,பழைய குத்பா பள்ளி ஜமாத் தலைவரும் வெல்ஃபேர் கமிட்டியின் துணை தலைவருமான செய்யது அபுதாஹிர் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.
மேலும் கமிட்டியின் பொருளாளர் ஹாஜி ஷஃபீக் நன்றி கூற விழாவினை வெல்ஃபேர் கமிட்டியின் தலைவரும் மின்ஹாஜ் பள்ளி ஜமாத் தலைவருமான ஹாஜி சாகுல் ஹமீது ஆலிம் ஒருங்கிணைப்பு செய்தார்.
இதனைத் தொடர்ந்து, KLK வெல்ஃபேர் கமிட்டியின் கௌரவ தலைவரும் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனருமான MKE உமர் தனது வாழ்த்து செய்தியினை தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் கீழக்கரை அனைத்து ஜமாத் உறுப்பினர்கள், சுன்னத் வல்ஜமாத் நிர்வாகிகள், SDPI நிர்வாகிகள், IUML நிர்வாகிகள், கண்ணாடி வாப்பா அறக்கட்டளை அலுவலக தொடர்பாளர் சித்திக், நகர்மன்ற உறுப்பினர்களான சக்கினா பேகம், சர்ஃப்ராஸ் நவாஸ், டல்சி, மஜ்மஉல் ஹைராத்தியா அறக்கட்டளை நிர்வாகிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்களை சார்பில் மாதம் தோறும் தேவையுடைய மக்களுக்கு அரிசியும், தினமும் குடிநீர், மதிய உணவு, ஏழை ஜனாஸா நல்லடக்க பொருளாதார உதவி, 500 பிளாட் பகுதியில் இருந்து தாலுகா அலுவலகம் வரை சென்று வர தினமும் இலவச வாகனம் உள்ளிட்ட பல்வேறு உதவிகளையும் KLK வெல்ஃபேர் கமிட்டி மூலம் சிறப்பாக செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.
ஜஹாங்கீர்.
மாவட்ட நிருபர்.
கீழக்கரை.