துபாய் ஆக, 15
ஐக்கிய அரபு அமீரக ஷார்ஜா முவைலா பகுதியில் உள்ள லூலூ மாலில் Epricx மற்றும் Spread Smiles நிறுவனம் இணைந்து நடத்திய இந்திய சுதந்திர தின கொண்டாட்டம் Spread Smiles நிறுவனர் RJ Sara ஒருங்கிணைப்பில் மிக பிரமாண்டமாக பல்வேறு போட்டிகள், ஆடல், பாடல், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடை அணிவகுப்பு, 76வது சுதந்திர தினத்தை குறிக்கும்வககையில் 76 பேருடன் கொடி அணிவகுப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளோடு அருணா வீரராகவன் தொகுத்துவழங்க மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தமிழகத்தில் இருந்து டாக்டர் ஆல்பரட் ஜோஸ், 2022ல் ஐக்கிய அரபு அமீரக-உலக அழகி பட்டம் வென்ற பமேலா சரீனா ருல், ஈமான் பொதுச்செயலாளர் ஹமீது யாசின், கேப்டன் டிவி அமீரக முதன்மை நிருபர் கமால் கேவிஎல், அமீராக தேமுதிக சின்னா, மீடியா7 ஆஸ்கர், வணக்கம் பாரதம் வளைகுடா இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா உள்ளிட்டோர் மேலும் பார்வையாளர்களாக மம்தா டிராவல் விலாகர், ஊடக பிரபலங்கள், சமூக ஆர்வலர் உஸ்மான் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கு மேற்பட்டோர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் போட்டியில் கலந்துகொண்ட அனைவருக்கும் சான்றிதழ் அளித்து கௌரவிக்கப்பட்டது மேலும் நிகச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் மற்றும் ஆதரவாளர்களுக்கும் ஒருங்கிணைப்பாளர் RJ சாரா நன்றிகளை தெரிவித்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.