புதுடெல்லி ஆக, 13
நாட்டின் அந்நிய செலவாணி கையிருப்பு 60,145 கோடி டாலராக சரிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 4ம் தேதி உடன் முடிந்த வாரத்தில் 241.7 கோடி டாலர்கள் சரிந்துள்ளதாக ரிசர்வ் வங்கியின் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து மூன்றாவது முறையாக சரிவை கண்டுள்ள அன்னிய செலவாணி கையிருப்பு ஜூலை 28 ல் முடிந்த வாரத்தில் 316.5 கோடி டாலர் சரிந்து 60,387 கோடி டாலர் கையிருப்பு இருந்ததாக கூறப்பட்டுள்ளது.