சென்னை ஆக, 10
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் ஜெயிலர் திரைப்படம் இன்று வெளியாகிறது. உலகம் முழுவதும் இந்த திரைப்படம் நாலாயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. இதை கொண்டாடும் விதமாக பல்வேறு இடங்களில் ரஜினி ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். படத்தின் டிரைலரும் ப்ரோமோ காட்சிகளும் ரசிக்கும்படியாகவே இருப்பதால் ஜெயிலர் நிச்சயம் வெற்றி அடையும் என ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.