சென்னை ஆக, 7
நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஆகஸ்ட் 4ம் தேதி வெளியான சந்தன கடத்தல் வீரப்பனின் வாழ்க்கையை பேசும் தி ஹன்ட் ஃபார் வீரப்பன் ஆவணத்தொடர் வரவேற்பை பெற்று வருகிறது. செல்வமணி செல்வராஜ் இயக்கியுள்ள தொடர் தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியுள்ளது. வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி, காவல் அதிகாரிகள் எல்லையோர கிராம மக்கள் ஆகியோரின் பார்வையில் இத்தொடர் பதிவு செய்யப்பட்டுள்ளது.