சென்னை ஆக, 3
தமிழகம் முழுவதும் இன்று ஆடிப்பெருக்கு விழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. புதுமணத் தம்பதிகள் தங்கள் திருமண மாலைகளை ஆற்றில் விட்டும், பெண்கள் கழுத்தில் புதிய மஞ்சள் கயிறு கட்டியும் சிறப்பு வழிபாடு செய்தனர். சிறப்பு வழிபாடு செய்ய நீர்நிலைகள், குளங்கள் ஏரிகள் அரசு தரப்பில் பாதுகாப்பு அம்சங்கள் செய்து உள்ள நிலையில், அனைவரும் பாதுகாப்பாக வழிபட வலியுறுத்தப்பட்டுள்ளது