ஜப்பான் ஆக, 1
ஜப்பான் நாட்டின் தெற்கு பகுதியில் கானுன் என்ற புதிய புயல் உருவாகியுள்ளது. இந்த புயல் கடல் வழியாக நகர்ந்து ஒகினாவா மற்றும் அமாமி பகுதியில் கரையை கடக்க உள்ளது. அப்போது 198 கிலோமீட்டர் வேகம் வரை காற்று வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்த நிலையில் கானுன் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 264 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.