சென்னை ஜூலை, 31
12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 13 முதல் ஏப்ரல் மூன்றாம் தேதி வரை நடைபெற்றது அதன் முடிவுகள் மே மாதம் எட்டாம் தேதி வெளியிடப்பட்டது. இந்நிலையில் 12-ம் வகுப்பு மாணவர்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை இன்று முதல் தங்கள் படித்த பள்ளிகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வு துறை அறிவித்துள்ளது. மேலும் பிற தேர்வர்கள் தங்கள் தேர்வு எழுதிய மையங்களில் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெறலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.