சென்னை ஜூலை, 28
மொஹரம் பண்டிகை ஒட்டி நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. இதனால் தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை வருவதால் பொதுமக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக இன்று மற்றும் நாளை தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. மேலும் சொந்த ஊர் சென்றவர்கள் திரும்ப ஏதுவாகவும் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பேருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.