புதுடெல்லி ஜூலை, 21
மணிப்பூர் விவகாரம் குறித்து இன்று இரு அவைகளிலும் விவாதிக்கப்பட உள்ளது. மணிப்பூர் கலவரத்தில் இரண்டு பெண்கள் ஆடை இன்றி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவத்திற்கு நாடு முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது. இதனிடைய மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வழங்கிய நோட்டீசுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. நேற்று தொடர் அமளியால் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.