சென்னை ஜூலை, 20
குரூப் 4 இல் காலியாக உள்ள 10,292 இடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஜூலை 24 ம் தேதி டிஎன்பிஎஸ்சி தேர்வு நடத்தியது. இதில் தேர்ச்சி பெற்ற தகுதியானவர்களுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை பணி நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் கட்ட கலந்தாய்வில் வட்டாட்சியர், இளநிலை உதவியாளர், வரி வசூலிப்பாளர், கள உதவியாளர், கிடங்கு காப்பாளர்களும், இரண்டாம் கட்ட கலந்தாய்வில் தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.