கீழக்கரை ஜூலை, 13
கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட 21வது வார்டில் உள்ள பழைய குப்பை கிடங்கு இடத்தில் இளைஞர்களுக்கு வாலிபால் விளையாட்டு அரங்கம் அமைத்திடவும், பொது நூலகம் அமைத்திடுமாறு நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அப்போது நகர்மன்ற உறுப்பினர் சர்ஃப்ராஸ் நவாஸ், சித்தீக் மற்றும் நகர் திமுக செயலாளர் பஷீர் அகமது ஆகியோர் உடனிருந்தனர்.
அந்த மனுவில் ஊர் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள்,பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். இந்த மனுவின் நகல் நகர்மன்ற துணைதலைவர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் மற்றும் அனைத்து வார்டு கவுன்சிலர்களிடமும் வழங்கப்பட்டுள்ளன.
அடுத்து வரும் நகர்மன்ற சாதாரண கூட்டத்தில் தீர்மானமாக கொண்டு வந்து மக்களின் கோரிக்கையை நிறைவேற்றி தருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாக மூர் விளையாட்டு அணியின் தலைவரும் சமூக ஆர்வலருமான மூர் ஹஸனுதீன் எமது செய்தியாளரிடம் தெரிவித்தார்.
ஜஹாங்கீர்
மாவட்ட நிருபர்
கீழக்கரை.