விழுப்புரம் ஜூலை, 9
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் திடீர் கடல் சீற்றத்தால் ராட்சதலைகள் சீறிப்பாய்ந்து கடல் நீர் குடியிருப்பு பகுதியில் புகுந்தது. இதனால் அனிச்சங் குப்பம் பகுதி மீனவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்த கிராம மக்கள் இதுபோன்று கடல் சீற்றம் இயற்கைக்கு மாறாக உள்ளது. பகல் நேரத்தில் ஏற்பட்டதால் பெரிய அளவில் பாதிப்பு இல்லை இரவில் ஏற்பட்டிருந்தால் பெரும் பாதிப்பு அடைந்திருக்கும் என்று தெரிவித்தனர்.