அரியலூர் ஆகஸ்ட், 17
அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டியில் தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,
மத்திய அரசு 1.1.2022 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி வழங்கப்படும் என்று அறிவித்துள்ள நிலையில், தமிழக அரசு அதே 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
இந்நிலையில் அரசு பணியாளர்கள் 1.1.2022 முதல் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது. விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அகவிலைப்படி அளிக்கப்படுகிறது. அதனை 6 மாதங்களுக்கு தள்ளிக் கொடுப்பதால் தமிழக அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும்.
மேலும் வருகிற 25 ம் தேதி தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கம் ஏற்கனவே அறிவித்தது போல் 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் 10 மையங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். அந்த ஆர்ப்பாட்டத்தின்போது தற்போது விடுபட்டுள்ள 6 மாத அகவிலைப்படி உயர்வு குறித்தும் போராட்டம் நடத்துவோம். என அவர் கூறினார்