அரியலூர் ஆகஸ்ட், 14
அரியலூர் மாவட்டம் செந்துறை மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. நீதிபதிகள் ஏக்னஸ் ஜெபகிருபா, செந்தில்குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இங்கு குற்ற வழக்குகள் மற்றும் உரிமையியல் வழக்குகள் போன்றவற்றிற்கு வழக்காடிகளின் சமாதானம் அடிப்படையில் தீர்வு காணப்பட்டது. மேலும் மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படும் வழக்குகளுக்கு மேல் முறையீடு இல்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதில் திரளான வக்கீல்கள் கலந்து கொண்டனர்.