சென்னை ஜூன், 25
பி.இ. படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. தமிழ்நாட்டில் பி.இ.., பி.டெக். படிப்புகளில் மாணவ-மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு ஒரு லட்சத்து 87 ஆயிரத்து 693 மாணவ மாணவிகள் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு ஆன்லைன் வாயிலாக கடந்த 20ம் தேதி நிறைவு பெற்றது. சான்றிதழை சரியாக பதிவேற்றம் செய்து அங்கீகரிக்கப்பட்டவர்களுக்கு தரவரிசை பட்டியல் நாளை வெளியாகிறது.