சென்னை ஜூன், 17
ஒன்று முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வாரம் பள்ளிகள் திறக்கப்பட்டது. வெயில் காரணமாக கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டதால் சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். அதன்படி இன்று அரசு தனியார் பள்ளிகள் திறக்கப்படும். ஆனால் சில தனியார் பள்ளிகள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை மதியம் வரை பள்ளிகள் செயல்படும் அரைநாள் விடுமுறை அளிக்கப்படும் என தெரிவித்துள்ளன.