சென்னை ஜூன், 17
அமலாக்க துறையை வைத்து செந்தில் பாலாஜி மூலம் திமுகவை மிரட்ட மத்திய பாரதிய ஜனதா கட்சி அரசு திட்டமிட்டுள்ளதாக விமர்சனம் எழுந்து வரும் நிலையில், தற்போது திமுக அரசும் அடித்து ஆட ஆரம்பித்துள்ளது சில நாட்களாகவே பாஜகவின் சின்ன சின்ன நிர்வாகிகளை கைது செய்த தமிழக காவல்துறை தற்போது மாநில பொறுப்பில் இருப்பவர்களையும் விட்டு வைக்கவில்லை. இது பாஜகவிற்கு நேரடி சவாலாக மாறி உள்ளதாக கட்சியினர் கூறி வருகின்றனர்.